திருச்செந்தூர்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. திருநெல்வேலியிலிருந்து சுமார் 56 கி.மீ. தொலைவில் உள்ளது.

Gopuramமுருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாவதாகக் குறிப்பிடப்படுகிறது. முருகப்பெருமான் சூரபத்மனையும் அவனைச் சார்ந்த அசுரர்களையும் வதம் செய்த இடம். இத்தலத்திற்கு திருச்சீரலைவாய் என்ற பெயரும் உண்டு. சூரபத்மனின் வதத்திற்குப் பிறகு சிவபூஜை செய்து வழிபட அபிஷேகத்திற்காக தன் வேலினால் "கந்த புஷ்கரணி" என்ற தீர்த்தத்தை தோற்றுவித்த இடம் சற்று தொலைவில் உள்ளது. அந்த இடம் தற்போது "நாழிக்கிணறு" என்று அழைக்கப்படுகிறது. திருக்கோயிலுக்கு செல்வதற்கு முன் கடலிலும், பின்னர் இந்தக் கிணற்றிலும் நீராட வேண்டும்.

Moolavarஇங்கு முருகப்பெருமான் தமது நான்கு திருக்கரங்களில் அபயம், வரதம், பூ, ஜெபமாலை தாங்கி கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். அவருக்குப் பின்னே பஞ்சலிங்கம் உள்ளது. அந்த லிங்கங்களை வழிபடுவதற்காகவே முருகப்பெருமான் கரத்தில் மலர் இருப்பதாகக் கூறுவர். இத்திருக்கோயிலில் விபூதிப் பிரசாதம் கையில் கொடுப்பதில்லை. பன்னீர் இலையில் தருகிறார்கள்.

Utsavarகுமரகுருபரர் ஐந்து வயது வரையில் ஊமையாகப் இருந்தவர். அவருடைய பெற்றேhர்கள் குழந்தையை இத்தலத்திற்குக் கொண்டு வந்து கிடத்தி தவமிருந்தனர். ஒருநாள் இரவில் முருகப்பெருமான் தோன்றி குழந்தையின் நாவில் வேலினால் எழுதி பேச வைத்தார். பேசத் தொடங்கிய குமரகுருபரர் முருகன் மீது "கந்தர் கலி வெண்பா" என்னும் பாடலை பாடினார். ஆதிசங்கரர் தம் நோய் நீங்க இங்கு "சுப்பிரமணிய புஜங்கம்" பாடினார்.

இங்கு வைகாசி விசாகம், கந்தர் சஷ்டி போன்ற விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com